கருவி நிறுவனத்தின் நடுவப் பணியகத் திறப்பு விழா வெகு விமரிசை

 


மாற்றுத் திறனாளிகளின் சமூகவள நிலையமான கருவி நிறுவனத்தின் புதிய நடுவப் பணியகத் திறப்பு விழா 20.05.2026 புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.



கருவி நிறுவனத்தின் கௌரவத் தலைவர் திரு. கணபதிப்பிள்ளை சர்வானந்தா அவர்களின் தலைமையில், ‘கருவி’ நிறுவுனர் திரு. கனகலிங்கம் தர்மசேகரம் அவர்களின் வழிநடத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொழிலதிபர் திரு. சிவலோகநாதன் அவர்கள் கலந்து கொண்டு பணியக கட்டடத்தை திறந்து வைத்தார்.



தொடர்ந்து ‘கருவி தரு’ சிறப்புமலர் வெளியீடும் நடைபெற்றதுடன் இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், ஆர்வலர்கள் எனப் பலரும் பங்குபற்றினர்.



யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வலிகாமம் கிழக்கு பிரதேசசபைக்கு உட்பட்ட நீர்வேலி தெற்கு பூதர்மடம் பகுதியில் குறித்த புதிய கட்டிடம் நலன்விரும்பிகளின் நிதியுதவிகளுடன் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.



மாற்றுத்திறனாளிகளை வலுப்படுத்தி சுயதொழில் திறன்களை அவர்களுக்கு பயிற்றுவித்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடு கடந்த 13 ஆண்டுகளாக கருவி நிறுவனம் செயலாற்றி வருகிறது.  


































Post a Comment

Previous Post Next Post