கருவி மாற்றுத்திறனாளிகள் சமூக வள நிலையத்தின் 13 ஆவது ஆண்டு நிறைவு விழா 12.06.2026 வெள்ளிக்கிழமை நண்பகல் 2 மணிக்கு நீர்வேலி பூதர்மடத்தில் அமைந்துள்ள அதன் புதிய நடுவப் பணியகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
கருவி நிறுவனத்தின் தலைவர் கணபதி சர்வானந்தா அவர்கள் தலைமையில் நிறுவனக் கொடியேற்றல், விருந்தினர்களின் மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் இனிதே ஆரம்பமாகின.
குறித்த நிகழ்வில் வடமாகாண நன்னடத்தை மற்றும் சிறார் நலச் சேவைகள் அமைச்சின் ஆணையாளர் சுஜீவா சிவதாஸ், யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் அதிபர் ரட்ணம் செந்தில்மாறன், சுயாதீன ஊடகவியலாளர் எம். நிலாந்தன், சட்டத்தரணி சோ. தேவராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
கருவி நிறுவனத்தின் பொருளாளர் இ. கந்தராசா அவர்களின் வரவேற்புரையினைத் தொடர்ந்து கருவி நிறுவனத் தலைவர் கணபதி சர்வானந்தா அவர்களின் தலைமையுரையும் அதனைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்களின் உரைகளும் இடம்பெற்றன.
கருவி நிறுவனம் 13 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பாடசாலைகளில் மாணவர்கள் மத்தியில் நடாத்திய வினாடிவினாப் போட்டியில் வெற்றி பெற்ற 25 மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
மாணவி ஒருவரின் கவிதை வாசிப்பை தொடர்ந்து கருவி நிறுவனத்தின் பணிப்பாளர் சபை அங்கத்தவரான வன்னியூர் அன்பழகனின் பாடல்கள் பாடும் நிகழ்வு இடம்பெற்றது.
கருவி நிறுவனத்தின் ஸ்தாபக தலைவரான கனகலிங்கம் தர்மசேகரம் அவர்கள் நிகழ்வை சிறப்பாக தொகுத்து வழங்கியிருந்தார்.
சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் நினைவுப் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இறுதியாக கருவி நிறுவனத்தின் உபபொருளாளரான செல்லத்துரை பிரிந்தாபரனின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவடைந்தன.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
Post a Comment