யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மயில்வாகனம் மேரி பொன்றோஸ் அவர்களின் ஆறாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கருவி மாற்றுத்திறனாளிகள் சமூக வள நிலையத்தின் அங்கத்தவர்களுக்கான உலர் உணவுப்பொதிகளும், மதியபோசனம் வழங்கும் நிகழ்வும் 07.07.2026 செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணிக்கு நீர்வேலியில் அமைந்துள்ள கருவி நிறுவன நடுவப் பணியகத்தில் இடம்பெற்றது.
தொடர்ந்து கருவி நிறுவனத்தின் நிர்வாக சபையினரது உரைகளும் இடம்பெற்றன.
கருவி நிறுவனத்தின் கௌரவ தலைவரான திரு. கணபதி சர்வானந்தா அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் வருகை தந்திருந்த கருவி நிறுவன அங்கத்தவர்கள் உலருணவுப் பொதிகளை பெற்றுக் கொண்டனர்.
மதியபோசன உபசரிப்புடன் நிகழ்வுகள் அனைத்தும் இனிதே நிறைவடைந்தன.
நீர்வேலியில் புதிதாக கருவி நிறுவனத்தின் நடுவப்பணியகம் அமையப்பெற்ற பின் இடம்பெறும் முதலாவது உதவி வழங்கும் நிகழ்வு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.












Post a Comment