மதிய போசன உபசரிப்பை தொடர்ந்து கருவி நிறுவனத்தின் ஸ்தாபக தலைவரான திரு. கனகலிங்கம் தர்மசேகரம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கருவியின் அங்கத்தவர்கள், நலன்விரும்பிகள் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் வருகை தந்திருந்த கருவி நிறுவன அங்கத்தவர்கள் உலருணவுப் பொதிகளை பெற்றுக் கொண்டனர்.
குறித்த நிகழ்வில் பங்கேற்ற கருவி நிறுவனத்தின் கௌரவ தலைவரான கணபதி சர்வானந்தா அவர்கள் கருத்துரைக்கையில்,
கருவி நிறுவனத்தினால் இப்படியான அறக்கொடைகளை தொடர்ந்தும் வழங்கி வருகிறோம். கருவியின் அங்கத்தவர்களுக்கு வரிசைக் கிரமமாக இந்த உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இவற்றைப் பெற்றுக் கொள்ளும் எமது அங்கத்தவர்களும் இந்த உலருணவுப் பொதிகளை மிகவும் பெறுமதியான உணர்கிறார்கள். அதனால் நாங்களும் கொடையாளர்களை அணுகி அவர்களை இப்படியான உதவிகளை வழங்குமாறு ஊக்குவிக்கிறோம். மேற்குறித்த சமூக உதவிகளை வழங்கி வரும் கொடையாளர்களை நாம் என்றுமே மறக்கக் கூடாது. எனத் தெரிவித்தார்.
நன்றியுரையுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவடைந்தன.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
Post a Comment