அமரா் சின்னப்பாபிள்ளை நினைவாக உதவிகள்

 


யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சேர்ந்த அமரர் சின்னப்பாபிள்ளை அவர்களின் ஞாபகார்த்தமாக கருவி அங்கத்தவர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் மற்றும் மதிய உணவு என்பன அவரது சிராா்த்த தினமான கடந்த சனிக்கிழமை 11 ஆம் திகதி நீா்வேலியில் உள்ள கருவியின் சேவை அலகில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.

கருவி அமைப்பின் தலைவா் கணபதி சா்வானந்தா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கருவியின் ஸ்தாபகத் தலைவா் எஸ்.தா்மசேகரம் உட்பட பலா் கலந்துகொண்டனா். கருவியின் செயலாளா் கீதா கிருஷ்ணன் நன்றி தெரிவித்து உரையாற்றினாா்.

இவ்வுயரிய பணிக்குப் பங்களிப்புச் செய்த சின்னப்பாபிள்ளை குடும்பத்தினருக்கு கருவி நிறுவனம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.








Post a Comment

Previous Post Next Post